சிவாங்கி வாங்கிய சொகுசு கார் - விலை எத்தனை கோடி பாருங்க..
சிவாங்கி சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
சிவாங்கி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தவர் சிவாங்கி. பின்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று தனக்கென தனி ரசிகர்களை கட்டிப்போட்டார்.
அந்த நிகழ்ச்சியில் கோமாளியாக முதல் மூன்று சீசன்கள் கலந்து கொண்ட சிவாங்கி நான்காவது சீசனில் குக்காக மாறி இருந்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.
சொகுசு கார்
இதற்கிடையில் சமீப காலங்களில் மிகவும் மாடர்னாகவும், அவ்வப்போது கொஞ்சம் கிளாமராகவும் உடையணிந்து போட்டோஷூட்டுகளை வெளியிட்டு வந்தார்.
இவருக்கு இன்ஸ்டாவில் ஃபாலோவர்ஸ் ஏராளம். தற்போது சன் டிவியின் டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்நிலையில் சிவாங்கி புதிய மெர்சிடிஸ் பென்ஸ் GLE கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
இதன் விலை சுமார் ஒன்றரை கோடி ரூபாய். தனது அப்பா, அம்மா உடன் சென்று அந்தக் காரை அவர் வாங்கி இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.