அது மட்டுமே போதும் - கண்ணீர் மல்க பேசிய விஜயகாந்த் மகன்!

Vijayakanth Tamil Cinema
By Sumathi Aug 09, 2025 10:27 AM GMT
Report

விஜயகாந்த் மகன் என்கிற பெருமை மட்டும் போதும் என விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

கேப்டன் பிரபாகரன்

கேப்டன் பிரபாகரன் படம் வரும் 22-ல் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. கடந்த 1991-ம் ஆண்டு வெளியான இந்த படத்தை ஆர். கே. செல்வமணி இயக்கினார்.

vijaya prabakaran

இது விஜயகாந்தின் 100-வது படம். இந்த படத்தின் மூலம் தான் விஜய்காந்திற்கு 'கேப்டன்' என்ற அடைமொழி கிடைத்தது. இதில் சரத்குமார், மன்சூர் அலி கான், ரூபினி, லிவிங்ஸ்டன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்தனர்.

இந்தியில் பேசணுமா? கோபத்தில் கொந்தளித்த கஜோல் - வைரலாகும் வீடியோ!

இந்தியில் பேசணுமா? கோபத்தில் கொந்தளித்த கஜோல் - வைரலாகும் வீடியோ!

விஜய பிரபாகரன் கண்ணீர்

இளையராஜாவின் இசையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாசமுள்ள பாண்டியரே என்கிற பாடலும் ஆட்டமா தேரோட்டமா என்கிற பாடலும் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது.

captain prabakaran

இந்நிலையில் படத்தின் இசை, டிரெய்லர் மறு வெளியீட்டு விழாவில், நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்துக் கொண்டார்.

அப்போது பேசிய அவர், "எம்.பி பதவி எல்லாம் எனக்கு முக்கியம் இல்லை. கேப்டன் மகன் விஜய பிரபாகரன், எனக்கு வேற பெருமை ஏதும் வேண்டாம், கடைசி வரை விஜயகாந்த் மகன் என்கிற பெருமை மட்டும் போதும்” எனத் தெரிவித்துள்ளார்.