விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சிவகார்த்திகேயன்? அவரே சொன்ன பதில்
அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் பதிலளித்துள்ளார்.
அமரன்
சிவகார்த்திகேயன், சாய்பல்லவி ஆகியோரின் நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி வெளியீடாக திரைக்கு வர உள்ளது.
மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சி கோவையில் உள்ள கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
சிவகார்த்திகேயன்
இதில் சிவகார்த்திகேயன் உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டு மாணவர்களிடம் கலந்துரையாடினர். மேலும் மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர் "இராணுவ உடையை கடைசியாக போட்டு விட்டு அதன் நினைவாக உடையை வீட்டு கொண்டு சென்றுவிட்டேன் எனவும் உடையை விட முகுந் என்ற பெயர் எனக்கு மிகவும் பிடித்திருந்ததாக தெரிவித்தார்.
உடல் வலிமை இருந்தால் தான், இந்த படத்தில் நடிக்க சரியாக இருக்கும் என உடலை தயார் செய்ய ஜிம் சென்றேன். எனவே உடலில் கட்டி கட்டியாக உள்ளது. முகுந் கதை அனைவருக்கும் ஒரு செய்தியாக தான் தெரியும். எனவே இதை பற்றி படமாக தெரிய வேண்டும் என்பதால் எடுத்துள்ளோம்" என பேசினார்.
அதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த போது, "விஜய் அரசியலுக்கு வந்தது போன்று நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா" என்ற கேள்விக்கு, “சினிமாவில் நான் பண்ண வேண்டிய ரோல் அதிகம் உள்ளது. எனவே அரசியலுக்கு வருவதைப் பற்றி பின்னர் பார்ப்போம்” என பதிலளித்துள்ளார்.