முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொடூரமாக வெட்டிக் கொலை

police dead kill
By Jon Feb 10, 2021 02:37 PM GMT
Report

சிவகங்கை அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். மாத்தூர் கிராமத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் கோபால். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவர், தனது தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றபோது மர்மநபர்கள் கூர்மையான ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர்.

பலத்த காயமடைந்த கோபால், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், உடலை கைப்பற்றீ பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், அப்பகுதியில் தடயங்களை சேகரித்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.