Sunday, May 4, 2025

உறவினர்கள் விபத்து எனக்கூறி அழைத்து சகோதரிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை - வெறிச்செயல் !

Sexual harassment Virudhunagar
By Swetha a year ago
Report

அக்கா, தங்கை இருவரையும் 5 பேர் கூட்டு பாலியல் வண்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது.

வன்கொடுமை

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

உறவினர்கள் விபத்து எனக்கூறி அழைத்து சகோதரிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை - வெறிச்செயல் ! | Sisters Were Gang Raped In Virudhunagar

அதில், நான் எனது தங்கை வீட்டுக்கு சென்ற போது, எங்களுக்கு அறிமுகமான ராஜ்குமார் என்பவர் எங்களிடம் வந்து உங்களது மாமா விபத்தில் சிக்கி காயம் அடைந்துள்ளார் என கூறினார்.

தை நம்பி நாங்கள் இருவரும் அவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றோம். அவர் எங்களை, வாழ்வாங்கி பகுதியில் ஒரு காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஏற்கனவே 4 பேர் நின்றிருந்தனர்.

பேரணிக்கு செல்லவில்லையா..அமித் ஷாவை கேலி செய்த அஸ்வின்? வைரலாகும் பதிவு!

பேரணிக்கு செல்லவில்லையா..அமித் ஷாவை கேலி செய்த அஸ்வின்? வைரலாகும் பதிவு!

வெறிச்செயல் 

திடீரென அவர்கள் ராஜ்குமாரை தாக்குவது போல் தாக்கினர். மேலும் எங்களை அங்கிருந்த 4 பேரும் மிரட்டி கூட்டாக பாலியல் வண்கொடுமை செய்தனர் என்று புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

உறவினர்கள் விபத்து எனக்கூறி அழைத்து சகோதரிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை - வெறிச்செயல் ! | Sisters Were Gang Raped In Virudhunagar

இது குறித்து விசாரித்த போலீசார், அந்த 4 பேரின் கூட்டாளியாக ராஜ்குமார் என்பவர் இருந்துள்ளார் என்றும் அவர்கள் ராஜ்குமாரை தாக்குவது போல் தாக்கி விரட்டிவிட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரியவந்தது.

இதை தொடர்ந்து, ராஜ்குமார், பாலு, மற்றொரு ராஜ்குமார், சுந்தரமகாலிங்கம், கனி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.