முறைத்தவறி மோசமாக நடந்துக்கொண்ட தாய்மாமன் - கழுத்தை அறுத்த அக்கா மகன்!
தாய்மாமன் கழுத்தை, அக்கா மகன் வெட்டி கொலை செய்துள்ளார்.
தாய்மாமன் தகாத செயல்
வேலூர், கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருக்கு மோகன்ராஜ், செல்வராஜ் என இரண்டு மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முன் மூத்த மகன் மோகன்ராஜ் இறந்துவிட, அவரது மனைவி, மகள், மகன் ஆகிய மூன்று பேரும் செல்வராஜுடன் தங்கியிருந்தனர்.
இந்நிலையில், தென்னந்தோப்புக்குள் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் செல்வராஜ் சடலமாகக் கிடந்தார். உடலை மீட்டு போலீஸார் விசாரணையில் ஈடுபட்டனர். இதற்கிடையில், கொலைசெய்யப்பட்ட செல்வராஜுடைய அக்காள் லட்சுமியின் மகன் ஜோதிபாசு (23),
கழுத்தை அறுத்து கொலை
அக்காள் விஜயலட்சுமியின் 16 வயது மகன், அண்ணன் மோகன்ராஜின் 14 வயது மகன் ஆகிய 3 பேரும் சரணடைந்தனர். இதில், ஜோதிபாசு கூறுகையில், ‘‘என் இளைய தாய்மாமன் செல்வராஜுக்கும், என் அம்மாவுக்கும் சமீபத்தில் பிரச்னை ஏற்பட்டது.
அப்போது, ‘அக்கா’ என்றும் பார்க்காமல், என் அம்மாவின் காதை அவர் அறுத்துவிட்டார். மோகன்ராஜ் இறந்துபோன நிலையில், அவரின் மகளும், நானும் காதலிப்பதாக சின்ன மாமன் செல்வராஜ் கதைகட்டிவிட்டு, எங்களிடம் தகராறில் ஈடுபட்டுவந்தார். இதற்கெல்லாம், ஒரு முடிவு கட்டுவதற்காகத்தான் கொலைசெய்யத் திட்டம் வகுத்தோம். நேரம் எதிர்பார்த்துக் காத்திருந்த நேரத்தில்தான், நேற்று முன்தினம் இரவு போதையில் விழுந்து கிடந்தார்.
நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து, தேங்காய் வெட்டும் கத்தியால் கழுத்தில் வெட்டிவிட்டு, ஓடி வந்துவிட்டோம்’’ எனத் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.