மது கொடுத்து. தலையில் பாட்டிலால் அடித்து வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை..!! அதிர்ச்சி சம்பவம்
இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாகிய சம்பவம் உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் நடைபெற்றுள்ளது.
ஹோட்டல் பணிப்பெண்
ஆக்ராவில் உள்ள ஹோம்ஸ்டே ஒன்றில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டு, வலுக்கட்டாயமாக மது அருந்த வைத்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். முன்னதாக தான்எடுக்கப்பட்ட ஆட்சேபனைக்குரிய வீடியோ மூலம் சிலர் தன்னை மிரட்டுவதாக அந்தப் பெண் குற்றம் சாட்டினார்.
மேலும் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்ததாகவும், அவரது தலையில் கண்ணாடி பாட்டில் உடைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் ஒரு பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் சனிக்கிழமை இரவு ஒரு ஹோம்ஸ்டேயில் நடந்ததாக காவல் உதவி ஆணையர் (ஏசிபி) சதர் அர்ச்சனா சிங் தெரிவித்தார். "சம்பவத்திற்குப் பிறகு நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, இந்த வழக்கில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று ஏசிபி கூறினார்.