Sunday, Jul 6, 2025

மாணவனுக்கு மது கொடுத்து பலாத்காரம் செய்த ஆசிரியை - அதிர வைக்கும் தகவல்

Kerala
By Thahir 3 years ago
Report

டியூசனுக்கு வந்த மாணவனை மது கொடுத்து ஆசிரியை பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சோர்ந்து போன மாணவன் 

திருச்சூர் அருகே உள்ள மண்ணுத்தியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவன், கடந்த சில நாட்களாக சோர்வாக இருந்துள்ளான்.

சமீபத்தில் நடத்தப்பட்டுள்ள தேர்வுகளிலும் அவன் குறைந்த மதிப்பெண்களே எடுத்துள்ளான். சக மாணவர்களுடன் பழகாமல் ஒதுங்கியே இருந்த மாணவனின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ஆசிரியர்கள், அவனை அழைத்து கவுன்சிலிங் கொடுத்து விசாரித்துள்ளனர்.

பலாத்காரம் செய்த ஆசிரியை

அப்போது கடந்த சில நாட்களாக மாணவன், ஒரு ஆசிரியையிடம் டியூசனுக்கு சென்றுள்ளான். அவனுக்கு  ஆசிரியை, மது கொடுத்து பலாத்காரம் செய்துள்ளார்.

மாணவன் கூறிய தகவலைத் தொடர்ந்து சம்பவம் குறித்து மண்ணுத்தி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது தொடர்பாக ஆசிரியையிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

மாணவனுக்கு மது கொடுத்து பலாத்காரம் செய்த ஆசிரியை - அதிர வைக்கும் தகவல் | Teacher Sexual Harassment In Student

இதனை தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஆசிரியையை கைது செய்தனர்.