பெற்ற தந்தையே பாலியல் வன்கொடுமை - வேதனையில் விஷம் குடித்த சகோதரிகள்!
தந்தை பாலியல் வன்கொடுமை செய்ததில், சகோதரிகள் இருவர் விஷம் குடித்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமை
உத்தர பிரதேசம், பண்டா பகுதியைச் சேர்ந்தவர் மல்கான் சிங். இவர், மனைவி ரேகா தேவி, 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் இரண்டு மகள்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதனால் இருவரும் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளனர். ஒருக்கட்டத்தில் தந்தையின் தொல்லை தாங்காமக், இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்து விஷம் குடித்துள்ளனர். அதனையடுத்து, இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சகோதரிகள் தற்கொலை
இதில் ஒரு சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்னொருவர் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கணவர், மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து அறிந்த மனைவி அதிர்ச்சியில் அவர் மீது புகார் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து, பாலியல் தொல்லை அளித்து தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார். இதில், கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இரட்டை கொலை வழக்கில்
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மல்கான்சிங் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் பரோலில் வீட்டிற்கு வந்திருக்கிறார். இந்நிலையில் இச்சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.