வேறு ஒருவருடன் பழக்கம்..சொன்னா கேக்க மாட்டியா? சகோதரியை கொடூரமாக கொன்ற அண்ணன்!
வாக்குவாதத்தில் அண்ணன் தங்கையை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சகோதரி பழக்கம்
மதுரை மாவட்டம் கீரைத்துறை பகுதியில் வசித்து வருபவர் அங்கமுத்து. இருக்கு தமிழ்ராஜ் (வயது 41) என்ற மகனும், திலகவதி (32) என்ற மகளும் இருந்தனர். தமிழ்ராஜ் ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். திலகவதிக்கு கண்ணன் என்பவருடன் திருமணமாகி 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
இதற்கிடையில் கண்ணன் இராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், திலகவதிக்கு ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த ராகவேந்திரன் என்பவருடன் பழக்கம் ஏற்படுள்ளது. நாளடைவில் அதுவே கள்ள காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் சகோதரர் தமிழ்ராஜ்க்கு தெரியவரவே திலகவதியை கண்டித்துள்ளார்.
கொன்ற அண்ணன்
மேலும் ராகவேந்திரன் உடன் பழகுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ளுமாறும் தெரிவித்திருகிறார். ஆனால், அதை கண்டுகொள்ளாமல் திலகவதி அந்த உறவை தொடர்ந்துள்ளார். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து திலகவதி, தமிழ்ராஜ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் தங்கையை கடுமையாக தாக்கிய தமிழ்ராஜ் அவரது கழுத்தில் கயிற்றை இறுக்கில் தூக்கில் தொங்கவிட்டுள்ளார். இதனால் திலகவதி துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.