காதல் விவகாரம் - சகோதரியின் தலையை வெட்டி காவல் நிலையம் சென்ற சகோதரன்!
காதல் விவகாரத்தில் சகோதரியை கொலை செய்த சகோதரனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சகோதரி கொலை
உத்தி பிரதேச மாநிலம் ஃபதேபூர் பகுதியில் உள்ள மித்வாரா கிரமத்தைச் சேர்ந்தவர்கள் ரியாஸ் (22) மற்றும் அவரின் சகோதரி ஆஷிஃபா (18). சமீபத்தில் ஆஷிஃபாவும் அதே கிராமத்தைச் சேர்ந்த ரியாஸின் நண்பரான சந்த பாபு என்பவரும் காதலித்துள்ளனர். பின்னர் அவர்கள் இருவரும் வீட்டை விட்டு ஒட்டியுள்ளனர்.
இதுகுறித்து ஆஷிஃபாவின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரைம் கண்டுபிடித்து ஆஷிஃபாவை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்து சந்த் பாபுவை சிறையில் அடைத்துள்ளனர். இதுகுறித்து ஆஷிஃபாவுக்கும் சகோதரர் ரியாஸுக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.
இந்நிலையில் தகராறு பெரிதாகவே ரியாஸ் ஒரு கூர்மையான ஆயுதததைக் கொண்டு ஆஷிஃபாவின் தலையை துண்டித்துள்ளார். பின்னர் சகோதரியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் ரியாஸ் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
குற்றவாளி கைது
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆஷிஃபாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொல்லப்பட்ட சம்பவம் உறுதியானதை அடுத்து வழக்கு பதிவு செய்து ரியாஸை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.