HIV பாதித்த சகோதரன்; குடும்ப பெருமைக்கு களங்கமாம்.. சகோதரி செய்த செயல்!

Attempted Murder Karnataka Crime HIV Symptoms
By Sumathi Jul 29, 2025 07:25 AM GMT
Report

HIV தொற்று பாதித்த சகோதரனை, சகோதரி கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

HIV தொற்று பாதிப்பு

கர்நாடகா, டும்மி கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகார்ஜூன்(23). பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அவர், அவ்வப்போது தனது குடும்பத்தினரை சந்தித்து வந்துள்ளார்.

மல்லிகார்ஜுன்

அந்த வகையில் தனது நண்பரின் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த மல்லிகார்ஜுன், நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் மோதியதில், அவரும் அவரது நண்பர்களும் காயமடைந்தனர்.

15 மாத குழந்தையை பஸ் ஸ்டாண்டில் தவிக்கவிட்டு - இன்ஸ்டா காதலனுடன் பெண் ஓட்டம்!

15 மாத குழந்தையை பஸ் ஸ்டாண்டில் தவிக்கவிட்டு - இன்ஸ்டா காதலனுடன் பெண் ஓட்டம்!

சகோதரி வெறிச்செயல்

பின் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சைக்கு முன் நடத்தப்பட்ட ரத்த பரிசோதனையில் அவருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அறுவை சிகிச்சையின் போது அவரது காலில் இருந்து அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டதால், அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்ற மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

HIV பாதித்த சகோதரன்; குடும்ப பெருமைக்கு களங்கமாம்.. சகோதரி செய்த செயல்! | Sister Kills Hiv Positive Brother In Karnataka

உடனே அவரது சகோதரி நிஷா அவரை பெங்களூருக்கு அழைத்துச் செல்லலாம் என்று கூறி அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில், பயணத்தின் போது, மல்லிகார்ஜுன் இறந்துவிட்டதாகக் கூறி, உடலுடன் வீடு திரும்பியுள்ளார்.

இதில் மகன் மரணத்தில் மகள் நிஷா மற்றும் அவர் கணவர் மீது போலீசில் புகாரளித்தார். அதன் அடிப்படையில் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் குடும்பத்தின் பெருமையை காக்க, போர்வையால் அவரை மூச்சுத் திணறடித்ததாக நிஷா ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.