அண்ணனுடன் சேர்ந்து குடித்த தங்கை.. தலைக்கேறிய போதையில் பெண் செய்த காரியம் - அதிர்ச்சி!

Attempted Murder Crime Death Namakkal
By Vinothini Sep 06, 2023 06:05 AM GMT
Report

தங்கை தனது அண்ணனுடன் சேர்ந்து குடித்தபோது நேர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடிபோதை

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே கொமராபாளையம் கீழ்பாலப்பட்டியைச் சேர்ந்தவர் செல்லமுத்து. இவருடைய மனைவி வரதம்மாள், செல்லமுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு பாண்டியன் (55) என்ற மகனும், சியாமளா (48) என்ற மகளும் உள்ளனர்.

sister-killed-his-brother-while-drunk

பாண்டியன் ஒரு கூலி தொழிலாளி, இவருக்கு இரண்டு திருமணம் ஆகியுள்ளது. சியாமளா திருமணமாகி தகராறு காரணமாக தனது தாய் வீட்டில் இருந்தார், சில நாட்கள் முன்பு அவரது தாய் இறந்துவிடாதால் தனது சகோதரனுடன் இருந்து வந்தார். இவர்கள் இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்துள்ளது. அதனால் இவர்கள் இருவரும் சேர்ந்து குடிப்பது வழக்கம்.

பெண் செய்த காரியம்

இந்நிலையில், இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர், அப்பொழுது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது, அதன்பிறகு பாண்டியன் செந்தின்று உறங்கிவிட்டார். ஆனால் கோபம் குறையாமல் இருந்த சியாமளா, வீட்டில் இருந்த அடுப்பு ஊதும் இரும்பு குழலை எடுத்து பாண்டியன் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.

sister-killed-his-brother-while-drunk

இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், உடனே இறந்தவரின் மகனான தனபால் என்பவரை அந்த பெண் அழைத்து இவர் கீழே விழுந்து இறந்துவிட்டார் என்று கூறியுள்ளார். மேலும், அவரது தலையில் அடிபட்டிருந்ததால் சந்தேகமடைந்த தனபால் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அதனை தொடர்ந்து, போலீசார் விசாரணையில் சியாமளா தான் கொலை செய்தார் என்பனதை கண்டறிந்தனர். பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.