திருமணத்திற்கு பிறகும் காதலனுடன் தகாத உறவில் அக்கா - தம்பி வெறிச்செயல்!
முன்னாள் காதலனுடன் பேசி வந்த அக்காவையும், காதலனையும் தம்பி கொலை செய்துள்ளார்.
காதலனுடன் தொடர்பு
மதுரை, கொம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்(28). அதே ஊரைச் சேர்ந்த மகாலெட்சுமி என்பவரை காதலித்து வந்தார். இருவரும் வேறு வேறு சாதி என்பதால் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இருவரும் தொடர்ந்து பழகி வந்துள்ளனர். இதனால், மகாலட்சுமிக்கு வேறொருவருடன் அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். திருமணமாகி ஒரே வாரத்தில் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பெற்றோர் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார்.
மேலும், தனது முன்னாள் காதலன் சதீஷ்குமாருடன் அடிக்கடி போனில் பேசி வந்துள்ளார். இதனை அறிந்த அவரது தம்பி பிரவீன்குமார், இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால், இது முடிவுக்கு வராத நிலையில் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
அக்கா கொடூர கொலை
அதன்பின் ஆத்திரத்தில் பிரவீன்குமார், வேலை முடித்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சதீஷ்குமாரை வழிமறித்து மிளகாய்ப் பொடியை கண்களில் தூவி அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் அவரது தலை துண்டான நிலையில் அருகில் உள்ள நாடக மேடையில் வீசிவிட்டு சென்றுள்ளார்.
அதனையடுத்து, நேராக வீட்டிற்கு சென்று தனது அக்கா மகாலட்சுமியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். இதனை தடுக்க வந்த தாயின் கையையும் துண்டாக வெட்டி தப்பியுள்ளார். இதுகுறித்த தகவலறிந்த போலீஸார் சம்பவ இடம் விரைந்து உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
படுகாயமடைந்த தாயை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதற்கிடையில், பிரவீன்குமார் போலீசாரிடம் சரணடைந்துள்ளார். விசாரணையில் இந்த கொலைக்கு மேலும் 4 பேர் உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது. தற்போது அவர்களை பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.