அஜித் படம் பண்றீங்களா..? கும்பிடு போட்டு தெறித்து ஓடிய சிறுத்தை சிவா - வைரலாகும் Video!

Ajith Kumar Tamil Cinema Siva (director) Tamil Actors
By Jiyath Oct 29, 2023 12:00 PM GMT
Report

அஜித்துடன் அடுத்த படம் குறித்த கேள்விக்கு இயக்குனர் சிறுத்தை சிவா கொடுத்த ரியாக்ஷன் தற்போது வைரலாகி வருகிறது.

ஜப்பான் திரைப்படம்

இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த 'ஜப்பான்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த விழாவில் நடிகர்கள் சூர்யா, விஷால், ஜெயம் ரவி, இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், சிறுத்தை சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அஜித் படம் பண்றீங்களா..? கும்பிடு போட்டு தெறித்து ஓடிய சிறுத்தை சிவா - வைரலாகும் Video! | Siruthai Sivas Reaction For Directing Ajith Film

இந்நிலையில் ஸ்டேடியம் உள்ளே செல்லும் முன் இயக்குநர் சிறுத்தை சிவா செய்தியாளர்களை சந்தித்தார். பின்னர் கார்த்தியின் 'ஜப்பான்' படம் வெற்றி பெற வேண்டும் என படக்குழுவினருக்கு சிவா வாழ்த்துத் தெரிவித்தார்.

இதனால்தான் அஜித்தை வேண்டாம் என்று விஜய்யை செலக்ட் செய்தேன் - சங்கீதா ஓபன் டாக்!

இதனால்தான் அஜித்தை வேண்டாம் என்று விஜய்யை செலக்ட் செய்தேன் - சங்கீதா ஓபன் டாக்!

சிறுத்தை சிவா

அப்போது அவரிடம் "சார் நடிகர் அஜித்துடன் அடுத்த படம் பண்றீங்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது சிவா சட்டென கையெடுத்து கும்பிட்டு நன்றி என தெரிவித்து விட்டு அங்கிருந்து கிளம்பினார்.

அஜித் படம் பண்றீங்களா..? கும்பிடு போட்டு தெறித்து ஓடிய சிறுத்தை சிவா - வைரலாகும் Video! | Siruthai Sivas Reaction For Directing Ajith Film

இந்த காணொளியை வைத்து இணையவாசிகள்  'ஆளை விடுங்கடா சாமி, என சிவா தெறித்து ஓடிவிட்டார்' என்று அஜித் ரசிகர்களை ட்ரோல் செய்து வருகின்றனர். ஆனால் சிறுத்தை சிவா அந்த கேள்வியை சரியாக கவனிக்காமல் தான் சட்டென கும்பிட்டு கிளம்பி விட்டார் என அஜித் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். சிறுத்தை சிவா நடிகர் அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என 4 படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.