அவர நிம்மதியா சாக விடுங்க; கைவிட்ட டாக்டர்கள் - பிரபல நடிகரால் அதிர்ச்சி!
தனக்கு கல்லீரல் தானம் கொடுத்த நபரை குறித்து நடிகர் பாலா உருக்கமாக பேசியுள்ளார்.
நடிகர் பாலா
கொச்சியில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் நடிகர் பாலா கல்லீரல் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் கூறிய நிலையில், பாலா உயிர் பிழைத்தார். இதுகுறித்து பாலா கூறுகையில், மருத்துவர்களை பொறுத்தவரை நான் அவ்வளவு தான்.
என்ன முடிவு எடுப்பது என்கிற நிலையில் இருந்தது என் குடும்பம். அவரை நிம்மதியாக சாக விடுங்கள் என்றார் டாக்டர். அடுத்த 6 மணிநேரத்தில் அதிசயம் நடந்தது. அதன் பிறகே அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தார்கள். ஜேக்கப் ஜோசப் என்பவர் தான் எனக்கு கல்லீரல் தானம் செய்தவர்.
உருக்கம்
அவரை பற்றி நான் பேசியே ஆக வேண்டும். கல்லீரலை தானம் செய்தால் உங்களுக்கும் பிரச்சனை தான் என ஜேக்கபிடம் டாக்டர் கூறினார். இடையே ஏதாவது நடந்தால் பிரச்சனை என டாக்டர் அவரை எச்சரித்திருக்கிறார். அதற்கு அவரோ பாலாவுக்காக நான் இந்த ரிஸ்கை எடுக்கிறேன் என்றார்.
ஜேக்கப் மட்டும் அல்ல அவரின் மொத்த குடும்பமும் எனக்காக ரிஸ்க் எடுக்கத் தயாராக இருந்தது. கல்லீரல் தானம் கொடுக்கும் முடிவில் மாற்றமே இல்லை என்று ஜேக்கப், அவரின் குடும்பத்தார் தெரிவித்துவிட்டார்கள். நான் செய்யும் தான, தர்மங்களை அவர்கள் பார்த்திருக்கிறார்கள்.
அவர் தானம் கொடுப்பார் என நான் கனவிலும் நினைக்கவில்லை. அறுவை சிகிச்சை முடிந்த பிறகே இது எல்லாம் எனக்கு தெரிய வந்தது எனத் தெரிவித்துள்ளார்.