என் உயிரே போகலாம்.. டாக்டரை கல்யாணம் பண்ணிக்கோ - மனைவிக்கு நடிகர் உருக்கமான அட்வைஸ்
நடிகர் பாலா மருத்துவமனையில் தனது மனைவியுடன் இரண்டாவது திருமண நாளை கொண்டாடியுள்ளார்.
நடிகர் பாலா
இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பி நடிகர் பாலா. இவர் 2003-ல் 'அன்பு' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். அதன் பிறகு 'காதல் கிசு கிசு', 'கலிங்கா' போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும் மலையாளத்தில் பல படங்களில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து 'வீரம்' திரைப்படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்துள்ளார். மேலும் தம்பி, அண்ணாத்த போன்ற படங்களில் நடித்துள்ளார் . கடைசியாக மலையாளத்தில் அவர் நடித்த படம் 'ஷஃபீகிண்டே சந்தோஷம்'.
உருக்கம்
இந்நிலையில், இவர் கல்லீரல் பாதிப்பால் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இன்னும் இரண்டு அல்லது 3 நாட்களில் எனக்கு பெரிய அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. இப்போது நான் மருத்துவமனையில் இருக்கிறேன்.
உங்கள் அனைவரின் பிரார்த்தனையால் நான் இங்கு இருக்கிறேன். இந்த அறுவை சிகிச்சையின் போது மரணம் கூட நேரிடலாம். அதே சமயம் உங்கள் பிரார்த்தனையால் உயிர் பிழைக்கவும் வாய்ப்புள்ளது. நம்பிக்கையுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். இன்று எங்களது 2-வது திருமண நாள். என் மனைவி எலிசபெத் இந்த நாளை கொண்டாட விரும்பினார்.
பிறப்போ இறப்போ கடவுள் முடிவு செய்வார் என்று கூறும் பாலா, தனது மனைவியிடம் தனக்கு ஏதாவது நேர்ந்தால் அடுத்து நீ ஒரு நடிகரை திருமணம் செய்துகொள்ளாதே டாக்டரை திருமணம் செய்துகொள் எனத் தெரிவித்துள்ளார்.

லண்டனில் இருந்து சென்னை சென்ற விமானத்தில் கோளாறு : 360 பயணிகளுடன் நடுவானில் வானில் வட்டமடித்த விமானம் IBC Tamil
