தீவிர சிகிச்சையில் பிரபல நடிகர் - பதறியடித்து ஓடிய சிறுத்தை சிவா
உடல்நலக்குறைவால் நடிகர் பாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் பாலா
இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பி நடிகர் பாலா. இவர் 2003-ல் 'அன்பு' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். அதன் பிறகு 'காதல் கிசு கிசு', 'கலிங்கா' போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். மேலும் மலையாளத்தில் பல படங்களில் நடித்து பிரபலமானார்.
இயக்குநர் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் வெளியான 'வீரம்' திரைப்படத்தில் அஜித்க்கு தம்பியாக நடித்துள்ளார். மேலும் தம்பி, அண்ணாத்த போன்ற படங்களில் நடித்துள்ளார் . கடைசியாக மலையாளத்தில் அவர் நடித்த 'ஷஃபீகிண்டே சந்தோஷம்' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில்,
உடல்நலக்குறைவு
நடிகர் பாலா கல்லீரல் பாதிப்பால் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே நடிகர் பாலாவை மலையாள நடிகர் உன்னி முகுந்தன், தயாரிப்பாளர் பாதுஷா விஷ்ணு மோகன், ஸ்வராஜ் மற்றும் விபின் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்த்தனர்.
இந்நிலையில், சிறுத்தை சிவா தன் உடல் நலம் சரியில்லாத சகோதரனை காண கொச்சி சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .