2வது மனைவியை திருமணமாகி ஓராண்டிற்குள் பிரிந்த பிரபல நடிகர்!

Tamil Cinema Marriage Divorce
By Sumathi Oct 23, 2022 05:20 AM GMT
Report

சிறுத்தை சிவாவின் தம்பியான நடிகர் பாலா திருமணமாகி ஓராண்டுக்குள் மனைவியை பிரிந்துவிட்டார்.

2வது  திருமணம்

நடிகர் பாலா தமிழ், மலையாள படங்களில் நடித்து வருகிறார்.கடந்த 2010ம் ஆண்டு பாடகி அம்ருதா சுரேஷை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு அவந்திகா என்கிற மகள் இருக்கிறார். இந்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 3 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்தனர்.

2வது மனைவியை திருமணமாகி ஓராண்டிற்குள் பிரிந்த பிரபல நடிகர்! | Bala Talks About Leaving Wife Elizabeth Udhayan

அதன் பிறகு முறைப்படி விவாகரத்து பெற்றனர். அதனையடுத்து, டாக்டர் எலிசபெத் உதயன் என்பவரை 2021ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், திருமணமாகி ஓராண்டு கூட ஆகாத நிலையில் எலிசபெத்தை பிரிந்துவிட்டார்.

 வேதனையான நாட்கள்

ஃபேஸ்புக் லைவில் வந்த பாலா கூறியதாவது, மணி தற்போது அதிகாலை 4.30. மிகவும் வேதனையாக இருக்கிறது. ஒரு முறை திருமணம் தோல்வி அடைந்தால் அதை பற்றி யோசிக்க மாட்டோம். ஆனால் இரண்டாவது முறையும் தோல்வி அடைந்தால், யோசிக்க ஆரம்பிப்போம்.

2வது மனைவியை திருமணமாகி ஓராண்டிற்குள் பிரிந்த பிரபல நடிகர்! | Bala Talks About Leaving Wife Elizabeth Udhayan

என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்த மீடியாவுக்கு நன்றி. நீங்கள் வற்புறுத்தினாலும் நான் எலிசபெத்துடன் பேச மாட்டேன். ஆனால் அவர் என்னை விட சிறந்த நபர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஒரு டாக்டர். அவரை நிம்மதியாக இருக்க விடுங்கள். அவர் ஒரு பெண். நான் மாறுவேன்.

இது என் வாழ்நாளில் மிகவும் வேதனையான நாட்கள். எனக்காக என்னால் பேச முடியும். ஆனால் தற்போது நான் அதை செய்யவில்லை. என்னை தயவு செய்து மேலும் தூண்டிவிடாதீர்கள். மிக்க நன்றி என்றார். பின்னர் அந்த வீடியோவை அவர் நீக்கியது குறிப்பிடத்தக்கது.