காதல் விவகாரமா..? அழுது கொண்டே விஜய் டிவி நடிகை வெளியிட்ட வீடியோ
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் நாயகியாக நடித்து வருபவர் கோமதிப்பிரியா
கோமதிப்பிரியா
சிறகடிக்க ஆசை தொடர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ஒன்றாக இருந்து வருகின்றது. தொடர்ந்து வாராவாரம் வெளிவரும் டிஆர்பி'யில் முக்கியமான இடத்தை சிறகடிக்க ஆசை பிடித்திவிடுகிறது.

இதற்கு முக்கிய காரணம் தொடரில் நாயகியாக நடித்து வரும் கோமதி ப்ரியா. நாயகி கதாபாத்திரமான மீனா'வாக நடித்து ரசிகர்களை பெரிதாக கவர்ந்துள்ளார் கோமதி பிரியா.

சமூகவலைத்தளங்களிலும் அசிட்டிவாக இருக்கும் இவருக்கு பல followers உள்ளனர். இந்நிலையில் தான் அண்மையில், இவர் அழுது கொண்டே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
அந்த வீடியோவில் யுவன் சங்கர் ராஜாவின் "தேவதை பார்க்கும் நேரம் இது" பாடலில் இடம்பெற்ற "மிக அருகினில் இருந்தும் தூரம் இது" என்ற வரிகளையும் அவர் கேப்ஷனாக பதிவிட்டுள்ளார்.
மிக அருகினில் இருந்தும் தூரமிது என அவர் பதிவிட்டுள்ளதால் காதல் பிரச்சனை ஏதேனும் காரணமா..? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
திடீர் திருப்பம்: காரில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவர் - யாழ்ப்பாணத்தில் காதலன் மனைவியுடன் கைது IBC Tamil