படுக்கையறை வரை சென்ற உறவு - திருட்டு வழக்கில் கம்பி எண்ணும் இன்ஸ்டா பிரபலம்..!

Andhra Pradesh
By Karthick Mar 04, 2024 07:00 AM GMT
Report

பழக்கத்தின் காரணமாக வீட்டில் தோழியை அனுமதித்தன் காரணமாக ஒரு கிலோ தங்கத்தை குடும்பம் ஒன்று இழந்துள்ளது.

இன்ஸ்டா பிரபலம்

இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள், ரீல்ஸ்'கள் போன்றவற்றை பதிவிட்டு பிரபலமடைவார்கள் ஏராளம். அவர்களில் சிலர் சினிமாவில் நுழைந்து விடுகின்றனர்.

instagram-model-soumya-shetty-arrested-in-theft

அப்படி, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் சௌமியா ஷெட்டி. இன்ஸ்டாவில் கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வந்த இவர், அதன் மூலம் கிடைத்த புகழில் ஓரிரு தெலுங்கு மொழி படத்திலும் நடித்துள்ளார்.

instagram-model-soumya-shetty-arrested-in-theft

பட ஆடிஷன் ஒன்றிற்கு சென்ற போது, சௌமியா ஷெட்டுக்கும் ஆடிஷனுக்கு வந்த மற்றுமொரு பெண்ணான என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தோழி என்பதால், சௌமியா ஷெட்டியை மௌனிகா அடிக்கடி வீட்டிற்கு அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

21 வயது இன்ஸ்டா பிரபலம் திடீர் மர்ம சாவு - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

21 வயது இன்ஸ்டா பிரபலம் திடீர் மர்ம சாவு - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

திருட்டு

அப்படி அடிக்கடி வீட்டிற்கு சென்ற சென்று மௌனிகாவுடன் நெருக்கமாக பழகியுள்ளார். அப்படி, மௌனிகாவின் வீட்டிற்கு கடந்த ஜனவரி 29, பிப்ரவரி 19 ஆகிய தேதிகளில் சென்ற செளமியா ஷெட்டி வீட்டின் பீரோவில் இருந்த தங்க நகைகளை சிறுது சிறிதாக அவர்களுக்கு தெரியாமல் கொண்டு சென்றுள்ளார்.

instagram-model-soumya-shetty-arrested-in-theft

குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக பீரோவை பார்த்த மௌனிகாவின் வீட்டாருக்கு விஷயம் தெரிந்து காவல் நிலையத்தில், புகார் அளிக்க போலீசார் விசாரணையின் இறுதியில் சௌமியா ஷெட்டியை கைது செய்துள்ளனர்.