ரூ.2000 முதலீட்டில் ரூ.2 கோடி லாபம்; SIP தான் பெஸ்ட் - அருமையான வாய்ப்பு!
மியூச்சுவல் ஃபண்ட் SIP மூலம் முதலீடு செய்வது பிரபல உத்தியாக உள்ளது.
மியூச்சுவல் ஃபண்ட்
பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு மியூச்சுவல் ஃபண்டுகள் ஒரு சிறந்த முதலீட்டு கருவி. இதன் மூலம் எப்போதும் லாபம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. நஷ்டம் அடையவும் வாய்ப்புள்ளது.
எனவே இழப்புகளை சமாளிக்க சில முதலீட்டு நிதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். இழப்பை சந்தித்தாலும் முதலீடு செய்வதை நிறுத்தக் கூடாது. ஒரே இடத்தில் முதலீடு செய்யாமல் உங்கள் முதலீட்டை பல்வகைப்படுத்த வேண்டும்.
SIP முதலீடு
மியூச்சுவல் ஃபண்ட் SIP மூலம் முதலீடு செய்வது ஒரு நல்ல முதலீட்டு உத்தி. இதில், ரூ.500 அல்லது ரூ. 1000 போன்ற தொகையில் இருந்து தவணையாகச் செலுத்த முடியும். இது ஒரு தொடர் வைப்பு போன்றது. சந்தை ஏற்ற இறக்கங்கள் போன்ற எதனையும் கருத்தில் கொள்ளாமல் சீராக செயல்படுவதால் SIP, மியூச்சுவல் ஃபண்ட் பிரபலமாக உள்ளது.
SIP money rule ஆன 25/2/5/35 பின்பற்றினாலே போதும்.நாம் 25 வயது முதலே முதலீடு செய்ய தொடங்க வேண்டும். அடுத்த எண் 2 என்பது குறைந்த பட்ச முதலீடாக ரூ. 2000த்தில் இருந்து தொடங்கலாம். எண் 5 என்பது ஒவ்வொரு வருடமும் 5% அதிகம் சேர்த்து முதலீடு செய்வதைக் குறிக்கிறது.
35 என்பது SIP ஐ தொடர்ந்து 35 வருடங்கள் சேமிக்க வேண்டும் என்பதாகும்.
SIP இன் சராசரி வருமானம் 12%. இதில் நீங்கள் தக்க ஆலோசனையுடன் முதலீடு செய்யலாம்.