உலக முதலீட்டாளர்கள் மாநாடு: எந்தெந்த நிறுவனங்கள், எவ்வளவு கோடி முதலீடு செய்துள்ளது..?
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு செய்துள்ளன என்பது பற்றிய விவரம்.
முதலீட்டாளர்கள் மாநாடு
தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு - 2024 சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்று தொடங்குகியது. இந்த 2 நாள் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த மாநாடானது இன்று மற்றும் நாளை (ஜனவரி 7,8) நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற மாநாட்டில் எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு செய்துள்ளன என்பது பற்றிய விவரம் வருமாறு:-
1. வியட்நாம் நாட்டின் முன்னணி மின் வாகன தயாரிப்பு நிறுவனமான வின்பாஸ்ட்-ரூ.16 ஆயிரம் கோடி (தூத்துக்குடியில் தொழிற்சாலை அமைகிறது)
2. கோத்ரேஜ் நிறுவனம்-ரூ.515 கோடி முதலீடு (செங்கல்பட்டில் உற்பத்தி மையம) 446 பேருக்கு வேலை.
3. டாடா எலெக்டரானிக்ஸ்-ரூ. 12 ஆயிரத்து 82 கோடி முதலீடு (கிருஷ்ணகிரியில் செல்போன் உற்பத்தி மையம்) 40 ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
4. டி.வி.எஸ். குழுமம்-ரூ.5 ஆயிரம் கோடி (தமிழகம் முழுவதும் திட்டங்கள் 500 பேருக்கு வேலைவாய்ப்பு) 5. ஹூண்டாய்-ரூ.6 ஆயிரம் கோடி (காஞ்சிபுரத்தில் பெட்ரோலிய மின்சார வாகன கார் பேட்டரி தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்படுகிறது)
6. பெகட்ரான்-ரூ.1000 கோடி (நுகர்வோர் மின்னணு சாதனங்கள் உற்பத்தி மையம்)-8 ஆயிரம் பேருக்கு வேலை. 7. சீன நாட்டின் மிட்சுபிஹி நிறுவனம்-ரூ.200 கோடி (கும்மிடிப்பூண்டியில் மோட்டார் தொழிற்சாலை தொடங்கப்பட உள்ளது)
8. ரிலையன்ஸ் ஜியோ-ரூ.35 ஆயிரம் கோடி முதலீடு (புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலை) 2. கோத்ரேஜ் நிறுவனம்-ரூ.515 கோடி முதலீடு (செங்கல்பட்டில் உற்பத்தி மையம)
9. வே.எஸ். டபிள்யூ-ரூ.12 ஆயிரம் கோடி (புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் 6,600 பேருக்கு வேலை)
10. குவால்காம் நிறுவனம்-ரூ.177.27 கோடி முதலீடு செய்துள்ளது.