மக்களே இனி பஸ்,ரயில்களில் பயணிக்க ஒரே டிக்கெட் போதும்...எப்போது அமலாகிறது?

Tamil nadu Chennai
By Swetha Jul 10, 2024 03:49 AM GMT
Report

மக்கள் பயணத்தை மேற்கொள்ள ஒரே டிக்கெட் வசதி விரைவில் அமலாகிறது.

ஒரே டிக்கெட் 

சென்னையில் பல்வேறு பகுதிகளிலிருந்து அதிக அளவிலான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த சென்னை வாழ் மக்கள் தங்கள் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்கு சென்னை மாநகர போக்குவரத்து கழக பஸ்கள், மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்களை பயன்படுத்துவதுண்டு.

மக்களே இனி பஸ்,ரயில்களில் பயணிக்க ஒரே டிக்கெட் போதும்...எப்போது அமலாகிறது? | Single Ticket For City Bus Metrorail From December

தற்போது, இந்த 3 வித சேவைகளுக்கும் தனித்தனியே டிக்கெட் பெற்று பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து நாள்தோறும் பணிக்கு செல்லும் லட்சக்கணக்கான மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில்

ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில், மெட்ரோ; எப்பொழுது தொடக்கம் - வெளியான முக்கிய அறிவிப்பு

ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில், மெட்ரோ; எப்பொழுது தொடக்கம் - வெளியான முக்கிய அறிவிப்பு

முழு விவரம்

3 வித போக்குவரத்து சேவையையும் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் வசதியை செயல்படுத்த உள்ளது. அதில், முதல் கட்டமாக மாநகர பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில் சேவையை ஒரே டிக்கெட்டில் பயன்படுத்தும் வகையில் புதிய செயலி உருவாக்கப்பட்டு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களே இனி பஸ்,ரயில்களில் பயணிக்க ஒரே டிக்கெட் போதும்...எப்போது அமலாகிறது? | Single Ticket For City Bus Metrorail From December

அதே நேரத்தில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் மின்சார ரெயில் சேவை உள்பட 3 வகை போக்குவரத்திலும் ஒரே டிக்கெட்டை பயன்படுத்தும் வகையில் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.