இனி ஒரே பயணச்சீட்டுதான்.. முதலமைச்சர் ஆலோசனை!

M K Stalin Tamil nadu
By Sumathi Nov 17, 2022 04:45 AM GMT
Report

மாநகர பேருந்து, சென்னை மெட்ரோ ரயில், புறநகர் ரயில் என அனைத்திலும் ஒரே பயணச்சீட்டில் பயணிப்பது குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது.

 ஒரே பயணச்சீட்டு

ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தின் முதல் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று நடைபெறுகிறது. சென்னை நந்தனத்தில் அமைந்திருக்கும் மெட்ரோ ரயில் தலைமையகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

இனி ஒரே பயணச்சீட்டுதான்.. முதலமைச்சர் ஆலோசனை! | Single Ticket Chief Minister Advises Today

இக்கூட்டத்தில், மோட்டார் அல்லாத போக்குவரத்துக்கு முக்கியத்துவம் அளித்து பல வகையான போக்குவரத்து ஒருங்கிணைப்புகளை செயல்படுத்தி மேம்படுத்தும் முயற்சியாக நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட இருக்கின்றன.

குறிப்பாக, ஒரே பயணச்சீட்டில் சென்னை மாநகரப் பேருந்துகள், சென்னை மெட்ரோ ரயில், புறநகர் ரயில் என்று அனைத்திலும் பயணம் செய்யும் வசதி குறித்து ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.