சென்னையில் மெட்ரோ ரயில் பணி நடைபெறும் இடத்தில் விபத்து

Chennai Crime
By Irumporai Sep 27, 2022 03:21 AM GMT
Report

ராமாபுரம் மெட்ரோ ரயில் பணி நடைபெறும் இடத்தில் கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் பேருந்து ஓட்டுநர், கண்டெய்னர் லாரி ஓட்டுநர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் தற்போது மெட்ரோ பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது,அதே சமயம் இந்த பணிகள் நடைபெற்றுவருவதால் போக்குவரத்திற்கு பல பகுதிகள் இடையூறாக உள்ளது. குறிப்பாக போரூர் , வடபழனி இந்த பகுதிகளில் மெட்ரோ பணிகள் நடந்து வருகிறது.

சென்னையில் மெட்ரோ ரயில் பணி நடைபெறும் இடத்தில் விபத்து | Crane Overturned Accident At Ramapuram Metro Work

இந்த இடங்கள் சென்னையில் பிரதான சாலைகளாக இருப்பதால் சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் ராமாபுரம் மெட்ரோ ரயில் பணி நடைபெறும் இடத்தில் கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது .

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர், கண்டெய்னர் லாரி ஓட்டுநர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.