இதெல்லாம் உமா ரமணன் பாடியாதா?? சிவகாசி, திருப்பாச்சி படங்களின் ஹிட் பாடலும் லிஸ்ட்'ல இருக்கு

Vijay Ilayaraaja Tamil Singers
By Karthick May 02, 2024 05:19 AM GMT
Report

பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் நேற்று காலமானார்.

உமா ரமணன்

நிழல்கள் படத்தின் 'பூங்கதவே தாழ் திறவாய்' என்ற பாடலை பாடி அறிமுகமானவர் உமா ரமணன். தொடர்ந்து கேளடி கண்மணி, தூறல் நின்னு போச்சு, வைதேகி காத்திருந்தாள், தில்லுமுல்லு, முதல் வசந்தம் என படங்களில் பாடியுள்ளார்.  

singer uma ramanan

பிரபல இசையமைப்பாளர்களான MSV, இளையராஜா, வித்யாசாகர் போன்றோருடன் பணிபுரிந்துள்ள அவர், கடந்த சில மாதங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தார்.  

நேற்று திடீரென உமா ரமணன் மரணமடைந்துள்ளார். சென்னை அடையாறில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உமா ரமணன் மறைந்தாலும் அவரின் பாடல்கள் என்றென்றும் தமிழக ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடிப்பவை ஆகும்.

singer uma ramanan

அப்படி அவர் பாடி நமக்கு தெரியாத சில ஹிட் பாடல்களை அறிவோம்

  • முதலில் இடம்பெறுவது எப்போதும் இளையராஜா இசையில் வெளியான "மகாநதி" படத்தில் பாடல் தான். "ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி" என்ற அப்பாடல் இன்றளவும் பெரும் பிரபலம் தான்.
  • அரங்கேற்ற வேலை படத்தில் இளையராஜா இசையில் உமா ரமணன் பாடிய பாடல் ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ.

singer uma ramanan vijay songs

  • உமா ரமணனின் அறிமுக பாடலான பூங்கதவே தாழ் திறவாய். இளையராஜா இசையில் வெளியான இப்பாடல் நிழல்கள் படத்தில் இடம்பெற்றவையாகும். இப்பொதும் கேட்கப்பதற்கு இதமானதாக உள்ளது.

'நீ பாதி நான் பாதி கண்ணே' - திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்!

'நீ பாதி நான் பாதி கண்ணே' - திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்!

  • நடிகர் விஜய்யின் சிவகாசி படத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் உருவான இது என்ன இது என்ன புது உலகா பாடலையும் உமா ரமணன் தான் பாடியுள்ளார்.
  • அதே போல விஜய்யின் மற்றொரு படமான திருப்பாச்சியில் இடம்பெறும் "கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு" பாடலை பாடியதும் உமா ரமணன் தான்