ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம்.. பாடகி ஸ்வேதா மோகன் போட்ட டுவீட் - கொந்தளிக்கும் ரசிகர்கள்!

Tamil Cinema A R Rahman Tamil Singers
By Vinothini Sep 13, 2023 07:55 AM GMT
Report

இசை கச்சேரி விவகாரத்தில் பாடகி ஸ்வேதா மோகன் போட்ட டுவீட் வைரலாகி வருகிறது.

மறக்குமா நெஞ்சம்

இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் மறக்குமா நெஞ்சம் என்ற தலைப்பில் சென்னையில் உள்ள ஆதித்யாராம் அரண்மனையில் இசை நிகழ்ச்சி நடத்தினார். இந்த நிகழ்ச்சிக்காக டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் பலரும் அமர இடமில்லாமல், டிக்கெட் இருந்தும் நிகழ்ச்சியை கண்டு ரசிக்க முடியாமல் திரும்பி சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

singer-swetha-mohan-tweets-on-rahman-concert

இதனால் ரஹ்மான் மீது பலரும் குற்றச்சாட்டு வைத்தனர், இந்த தவறு நடந்ததற்கு காரணம் அவர் இல்லை என்றாலும் அதற்கு மன்னிப்பு கேட்டு தவறை ஏற்றுக்கொண்டார். இவருக்கு பல பிரபலங்கள் ஆதரவு அளித்து வந்தனர், தற்பொழுது பாடகி ஸ்வேதா மோகன் டுவீட் போட்டுள்ளார்.

ஸ்வேதா மோகன் பதிவு

இந்நிலையில், ஸ்வேதா மோகன் தனது டுவிட்டர் பக்கத்தில், "இந்த ட்வீட்டை புறக்கணிக்க முடியவில்லை. தனது வாழ்நாள் முழுவதும் அமைதி, அன்பு மற்றும் மனிதநேயத்திற்காக நின்ற ஒரு ஐகானின் இசை நிகழ்ச்சியில் நடந்த இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இது போன்ற செயல்களில் ஈடுபடும் ரசிகர்கள் ஏ.ஆர்.ஆர் சாரின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தகுதியானவர்களா? ஒவ்வொரு கச்சேரியிலும் அவர் பெண்களுக்கு செலுத்த வேண்டிய மரியாதையை நினைவூட்டும் வகையில் பாடல்கள்களை டெடிகேட் செய்பவர்.

வலிமையாக இருங்கள், #சிங்கப்பெண்ணே!! நாம் ஒரு கேவலமான சமுதாயத்தில் வாழ்கிறோம். என் இதயம் உனக்காகத் துடிக்கிறது. இதை கடந்து மீண்டும் எழ உங்களுக்கு தேவையான ஆற்றலை அனுப்புகிறேன்" என்று கூறியுள்ளார். இதில் அந்த பெண்ணை விட ரஹ்மானுக்கு அதிக ஆதரவு கொடுத்துள்ளதால் ரசிகர்கள் திட்டி தீர்க்கின்றனர்.