பட வாய்ப்பு வேணுமா? அப்போ அதை செய்யனும்.. அட்ஜஸ்ட்மென்ட் கேட்ட இயக்குனர் - பகீர் கிளப்பிய நடிகை!

Vinothini
in பிரபலங்கள்Report this article
பிரபல நடிகையிடம் அந்த மாதிரி விஷயத்தை இயக்குனர் கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை அனு இமானுவேல்
தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையான அனு இமானுவேல், மலையாளத்தில் நிவின் பாலி நாயகனாக நடித்த ஆக்சன் ஹீரோ பிஜூவில் கதாநாயகியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து, தமிழில் 2017-ம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளிவந்த துப்பறிவாளன் படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் வந்து போனார்.
அதன்பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நம்ம வீட்டுபிள்ளை திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் காந்த கண்ணழகி என்ற பாடல் பிரபலமானது, இந்த படத்திற்கு பிறகு காந்த கண்ணழகி என்றாலே இவர் தான் நினைவிற்கு வருவார், அதன்மூலம் பல ரசிகர்களை கவர்ந்தார்.
நடிகை பேட்டி
இந்நிலையில், நடிகை அனு இமானுவேல் சமீபத்தில் ஒரு பேட்டியில் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், "படவாய்ப்பு வேண்டுமென்றால் படுக்கைக்கு வா என்று என்னையும் பலர் அழைத்து இருக்கிறார்கள். ஆனால், இதை நினைத்து பயப்படாமல் என்னுடைய குடும்பத்தினரின் துணையுடன் எதிர்கொண்டு சமாளித்தேன்.
இது போன்ற நேரத்தில், தனியாக பிரச்சனைகளை சமாளிப்பதை விட, குடும்பத்தினருடன் சேர்ந்து எதிர்கொள்வது நல்லது. இது போன்ற நேரத்தில் நம் குடும்பத்தினரால் மட்டும்தான் நமக்கு உதவ முடியும் என்றார். மேலும், பெண்களை முன்னேற விடாமல் தடுப்பது இதுபோன்ற மோசமான நபர்கள் தான், அவர்களைப் பார்த்து பெண்கள் பயப்படாமல் துணிந்து முன்னேற வேண்டும்" என்று கூறியுள்ளார்.