கடவுளின் அவதாரமா? அப்போ சிகிச்சை தான் தேவைப்படுது - விளாசிய பிரபல பாடகர்!
பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சுக்கு பாடகர் ஸ்ரீனிவாஸ் மறைமுகமாக தாக்கியுள்ளார்.
கடவுளின் அவதாரம்
நடப்பாண்டில் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. அதில், முதல் 5 கட்டங்கள் நிறைவடைந்தது. தற்போது 6-ம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாளும், எஞ்சிய 7ம் கட்டம் ஜூன் 01-ம் தேதியும் நடைபெற உள்ளது.
இதற்கான வாக்கு சேகரிப்பில் அனைத்து அரசியல் கட்சிகளும், முக்கிய தலைவர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி தேர்தல் நடக்கவுள்ள இடங்களில் பிரதமர் நரேந்திர மோடி பரப்புரையாற்று வருகிறார். அந்தத் வகையில் அவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில்,
“என் அம்மா இறந்த பிறகு என் வாழ்க்கையில் நடந்த, நடக்கும் நிகழ்வுகளை எல்லாம் இணைத்து பார்க்கும் போது நான் உயிரியல் ரீதியாக பிறக்க வாய்ப்பில்லை என புரிந்தது. கடவுள் பூமியில் அவருடைய பணிகளை முடிக்க என்னை அனுப்பியுள்ளார் என்பதை முழுமையாக நம்புகிறேன்” இவ்வாறு பேசினார்.
பிரபல பாடகர்
இது பெரும் சர்ச்சையாக நெட்டிசன்கள் மத்தியில் வெடித்தது. இது தொடர்பாக பின்னணிப் பாடகர் ஸ்ரீனிவாஸ் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், ஒருவர் தன்னை கடவுளின் அவதாரமாக நினைத்துக் கொண்டால் அவருக்கு சிறப்பு சிகிச்சைத் தேவைப்படுகிறது என்று அர்த்தம்.
இங்கு மனிதாபிமானம் மட்டும் தான் சிறந்தது. இதைத் தவிர மற்றவை முக்கியமானதோ அல்லது சிறப்பு வாய்ந்ததோ கிடையாது. இங்கு நான் ஒருவரைப் பற்றி மட்டும் குறிப்பிட்டு பேசவில்லை.தங்களுடைய தொழிலில் வெற்றிகரமான மக்கள் என்று நினைத்துக் கொள்பவர்களை தாக்கும் நோய்.
அவர்களைக் கவனித்து முடிந்த உதவிகளை செய்யுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். இது பதிவை பார்த்த பலரும் இவர் பிரதமர் மோடியைத் தான் மறைமுகமாகத் தாக்கிப் பேசினார் என நெட்டிசன்கள் மத்தியில் வைரலானதும், அவர் அதை நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.