பிரதமர் மோடிக்கு மர்ம நபர் கொலை மிரட்டல் - என்.ஐ.ஏக்கு வந்த தகவலால் அதிர்ச்சி!
மர்ம தொலை பேசி அழைப்பில் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளது.
பிரதமர் மோடி
இந்தியாவில் தற்போது ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடி நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதும் அவரது பிரச்சாரம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் அவர் பிரச்சாரத்தில் பேசிய சில கருத்துக்களை எதிர்க்கட்சியினர் திரித்து அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், என்.ஐ.ஏவை தொடர்பு கொண்ட மர்ம நபர் பிரதமர் மோடி-க்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
கொலை மிரட்டல்
இந்த தகவலின் பேரில், சென்னை காவல் துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றது. அழைப்பு வந்த செல்போன் எண் குறித்தும், சிம்கார்டை பயன்படுத்திய நபர் யார்? என்பதை பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த நபர் ஏற்கனவே மிரட்டல் விடுத்த நபரா? அல்லது புதிதாக மிரட்டல் விடுக்கும் நபரா? என்பது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் சோதனையில் மூழ்கி வருகிறது. ஹிந்தியில் கொலை மிரட்டல் விடுத்ததன் பின்னணியில் வேறு யாரும் உள்ளனரா, என்று தேடி வருகின்றனர்.