எதிர்க்கட்சியினர் பிளேடு எடுத்துட்டு வராங்க - பாதுகாப்பில்லை - அதிர்ச்சி கொடுத்த பவன் கல்யாண்
ஆந்திர மாநிலத்தில் வரும் மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது.
சட்டமன்ற தேர்தல்
மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆந்திர மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் களமும் தீவிரமடைந்துள்ளது. ஆந்திர மாநிலத்திற்கு வரும் மே 13-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.
மொத்தமுள்ள 175 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, பவன் கல்யாணின் ஜன சேனா, பாஜக போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.
பாதுகாப்பில்லை..
பித்தபுரம் தொகுதியில் போட்டியிடவுள்ள நடிகரும், ஜன சேனா கட்சியின் தலைவரான பவன் கல்யாண் ஆளும் ஜெகன் மோகன் ரெட்டியையும் அவரது கட்சியையும் தீவிரமாக எதிர்த்து ஆந்திர மாநிலம் முழுவதிலும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார்.
சமீபத்திய பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், தன்னை சந்திக்க மக்கள் வரும் நேரத்தில்,தாக்குதல் நடத்தவேண்டும் என்ற இலக்குடன் சிலர் பிளேடுகளுடன் கூட்டத்திற்குள் ஊடுருவி விடுகிறார்கள் என்ற பவன்,
அவர்களை கண்டறிந்து பிடிப்பதே பாதுகாப்பு அணியினருக்கு பெரும் வேலையாக இருக்கிறது என்று கூறி, எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் தான் இதை செய்கிறார்கள் என்ற சந்தேகம் தனக்கு இருப்பதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை பவன் கல்யாண் வைத்துள்ளார்.