பிரபல பாடகி காலமானார் - கூகுள் தேடல் ட்ரெண்டிங்கில் முதலிடம்!
பிரபல போஜ்புரி பாடகி சாரதா சின்கா காலமானார்.
சாரதா சின்கா மறைவு
பீஹாரைச் சேர்ந்தவர் சாரதா சின்ஹா. நாட்டுப்புறப் பாடல்களால் மக்களை பெரிதும் கவர்ந்தவர். போஜ்புரி மற்றும் மைதிலி ஆகிய மொழிகளில் நாட்டுப்புறப் பாடல்களை பாடியுள்ளார்.
நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். 2017ல் இவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தார்.
தலைவர்கள் இரங்கல்
இந்நிலையில், திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு ரசிகர்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், பிரதமர் மோடி உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், கூகுள் தேடலில் டாப் ட்ரெண்டிங் டாப்பிக்காக இருந்து வந்தார்.
12 மணி நேர இடைவெளியில் 20,000 க்கும் மேற்பட்ட தேடல்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தேடல் அளவு 1000 சதவீதத்திற்கு மேல் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.