டிரம்ப் எடுத்த அதிரடி நடவடிக்கை - கதறி அழும் பிரபல நடிகை

Donald Trump United States of America Hollywood Actress
By Karthikraja Jan 29, 2025 08:21 AM GMT
Report

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்துவது தொடர்பாக பிரபல நடிகை செலினா கோம்ஸ் அழுதவாறு வீடியோ வெளியிட்டுள்ளார்.

டொனால்ட் டிரம்ப்

அமெரிக்கா அதிபராக கடந்த ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், சட்டவிரோதமாக குடியேறிய மக்களை நாடு கடத்துவது, பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமை ரத்து என பல்வேறு அதிரடி நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறார். 

donald trump

இதில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய மக்களை அடையாளம் கண்டு அவர்களை நாடு கடத்தும் பணியில் அமெரிக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது. 

டிரம்ப் உத்தரவால் கலக்கம் - அவசரமாக சிசேரியன் செய்து கொள்ளும் கர்ப்பிணிகள்

டிரம்ப் உத்தரவால் கலக்கம் - அவசரமாக சிசேரியன் செய்து கொள்ளும் கர்ப்பிணிகள்

செலினா கோம்ஸ்

இதன்படி மெக்சிகோ, கொலம்பியா, பிரேசில் ஆகிய நாடுகளை சேர்ந்த சட்டவிரோதமாக குடியேறிய மக்கள் கைது செய்யப்பட்டு விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக பிரபல நடிகையும், பாடகியுமான செலினா கோம்ஸ் அழுதபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

selena gomez crying

இந்த வீடியோவில், "நான் மிகவும் வருந்துகிறேன். எமது நாட்டு (மெக்ஸிகோ) மக்கள் அனைவரும் தாக்கப்படுகிறார்கள். குழந்தைகளை கூட விட்டு வைக்கவில்லை. எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஆனால் என்னால் முடியாது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஏதாவது செய்வதற்காக எல்லா வகையிலும் முயற்சிப்பேன். வெளிப்படையாக எந்தவித பாரபட்சமும் இன்றி மக்களை ஒடுக்குவது சரி இல்லை" என அழுது கொண்டே பேசியுள்ளார். 

வீடியோ பதிவிட்ட சில நேரங்களில் அதை நீக்கி விட்டார். செலினா கோம்ஸின் தந்தை மெக்சிகோவை பூர்விகமாக கொண்டவர் ஆவார். 2019 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்த மக்களின் இன்னல்களை பற்றி பேசும் 'லிவ்விங் அண்டாக்குமெண்டட்' என்ற ஆவணப்படத்தை நெட்பிளிக்ஸ் உடன் இணைந்து தயாரித்தார்.