பாதுகாப்பே இல்ல.. நைட்டு பஸ்ல அந்த மாதிரி தப்பா பண்ணாங்க - ராஜலட்சுமி வெளிப்படை!
ராஜலட்சுமி தனக்கு நடந்த அனுபவம் குறித்து பேசியுள்ளார்.
பாடகி ராஜலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தனது கணவருடன் சேர்ந்து கலந்துகொண்டவர் ராஜலட்சுமி. இவர்கள் இதன்மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தனர். அதற்கு முன்பு மக்கள் இசை பாடல்கள், நாட்டுப்புற பாடல்கள் பாடிக்கொண்டு குறிப்பிட்ட பகுதிகளில் பிரபலமாக இருந்த இவர்கள் பிறகு விஜய் டிவி மூலமாக தொலைக்காட்சியை பயன்படுத்தும் பலருக்கும் பரீட்சையமாக மாறி இருந்தனர்.
அதன்பிறகு தற்பொழுது இவர்கள் வெள்ளித்திரையில் பிஸியாக உள்ளனர். மேலும், ராஜலட்சுமி, லைசன்ஸ் என்ற திரைப்படத்தில் ராஜலட்சுமி தான் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
பேட்டி
இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "பொதுவாக நிகழ்ச்சிகளுக்கு காட்டு பகுதிகளில் தான் மேடை அமைத்து இருப்பார்கள். அப்போது நமக்கு தனியாக அறை வேண்டும் என்று நான் எதிர்பார்க்க முடியாது. மேடைக்கு அருகிலேயே ஓலை வைத்து அடைத்து ஒரு புடவையோ அல்லது எதையாவது சுற்றிக்கொண்டு அங்கு தான் ட்ரஸ் மாற்றுகிற நிலைமை தான் இருக்கும்.
கச்சேரி நைட் இரண்டு மணிக்கு பஸ் ஸ்டாண்டில் நம்ம ஃபுல் மேக்கப் போடு போய் நிற்கும் போது அங்கு பார்ப்பவர்களின் பார்வை வித்தியாசமாக இருக்கும். பல நேரங்களில் பஸ்ஸிலிருந்து கூட நம்மிடம் தவறாக நடப்பதற்கு பலர் முயற்சிப்பார்கள்.
இதைப் பற்றி வெளியே சொன்னால் கூட ராத்திரி நேரத்தில் அந்த பொண்ணு எங்க போயிட்டு வந்ததுன்னு யோசிக்க மாட்டாங்க. ஆனா பிரச்சனை என்று வெளியில சொன்னா உடனே எல்லோரும் சொல்றது அந்த நேரத்துல எதுக்கு இவ்வளவு மேக்கப் போட போகணும் என்று கேள்வி கேட்பாங்க" என்று கூறி தனது வேதனையை கொட்டியுள்ளார்.