அப்போ ராஜலட்சுமி, இப்போ இவரா?.. வாய்ப்புகளை பறிக்கும் அதிதி ஷங்கர் - வேதனையில் புலம்பிய பிரபலம்!
நடிகை அதிதி ஷங்கர் மற்ற பாடகிகள் வாய்ப்புகளை பிரித்ததால் சோகத்தில் புலம்பிய பிரபலங்கள்.
பிரபல நடிகை
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர். இவர் தனது டாக்டர் படிப்பை முடித்துவிட்டு, சினிமா மீது தனக்கு உள்ள ஆறுவத்தினால் இவர் படத்தில் நடிக்கத தொடங்கியுள்ளார். அதில் இவரது முதல் படமான விருமான் படத்தில் நடிகர் கார்த்தியுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் நடித்தது மட்டுமின்றி ஒரு பாடலையும் பாடினார். தற்பொழுது நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்துள்ளார். இதில் இவர் பாடிய வண்ணாரப்பேட்டை பாடல் ஹிட் ஆகியுள்ளது.
பிரபலம் புலம்பல்
இந்நிலையில், அதிதி ஷங்கர் தனது முதல் படத்தில் பாடிய மதுர வீரன் பாடல் ஹிட் ஆனது, ஆனால் அந்த பாடல் சூப்பர் சிங்கர் பாடகி ராஜலட்சுமி பாடியிருக்கவேண்டியது என்று எழுந்தது. தற்பொழுது இவர் மாவீரன் படத்தில் பாடிய வண்ணாரப்பேட்டை பாடல் ஹிட் ஆனது, ஆனால் இந்த பாடலை கர்ணன், குட் நைட் போன்ற படங்களில் பாடல்கள் பாடிய பாடகி மீனாட்சி இளையராஜா தான் பாடி இருந்தார் என்று கூறியுள்ளனர்.
மேலும், இது குறித்து பாடகி மீனாட்சி கூறுகையில், "இந்த பாடல் நீக்க பட்டதால், நான் மன உளைச்சலுக்கு ஆளானேன், சில நேரங்களில் எனக்கு நன்றாக பாடவரவில்லை என்று தோன்றுகிறது, நன்றாக பாடி இருந்தால் படத்தில் எனது குரலில் பாடல் வெளியாகியிருக்கும் என நினைத்து அழுதேன், சில நேரங்களில் இதைவிட நல்ல வாய்ப்பு வரும் என மனதை தேற்றி கொள்வேன்" என்று கூறியுள்ளார்.