தாக்கப்பட்டது மனோ மகன்களா? உண்மை இதுதான் - வெளியான சிசிடிவி காட்சி!
பாடகர் மனோ மகன்கள் தாக்கபட்டதாக சிசிடிவி காட்சி வீடியோ வெளியாகியுள்ளது.
மனோ மகன்கள்
பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் உள்ளிட்ட 4 பேர், மது போதையில் கல்லூரி மாணவர் மற்றும் சிறுவன் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த சம்பவத்தில் காயம் அடைந்த கல்லூரி மாணவர்கள் சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர்களின் பெற்றோர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனிப்படையில் பாடகர் மனோவின் மகன்களான சாஹீர், ரபிக் அவர்களின் நண்பர்களான
சிசிடிவி காட்சி
விக்னேஷ் மற்றும் தர்மா ஆகியோர் மீது கொலை மிரட்டல், தாக்குதல், ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில் மனோவின் மகன்கள் தரப்பிலும் தங்களை எதிர்தரப்பினர் தாக்கியதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக சிறுவர்களை மனோவின் மகன்கள் போலீசார் முன்னிலையில் தாக்குவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சம்பவத்தன்று பாடகர் மனோவின் மகன்கள் ஜாகீர், ரபீக் ஆகியோரை 4 மோட்டார்சைக்கிளில் வந்த 8 பேர் சேர்ந்து உருட்டு கட்டை,
கற்களை கொண்டு தாக்கும் காட்சிகள்
அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் மனோவின் மகன்கள் இருவரையும் 16 வயது சிறுவன் உள்பட 8 பேர் சேர்ந்து கல், கட்டையால் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.