நடுரோட்டில் சிறுவன் மீது தாக்குதல் -பாடகர் மனோவின் மகன்கள் கைது!

Tamil nadu Tamil Singers Mano
By Vidhya Senthil Sep 11, 2024 10:19 AM GMT
Report

 பாடகர் மனோவின் மகன்கள் இருவர் மீதும் 4 பிரிவுகளில் வளசரவாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 பாடகர் மனோ

பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் உள்ளிட்ட 4 பேர், மது போதையில் கல்லூரி மாணவர் மற்றும் சிறுவன் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.

mano

இந்த சம்பவத்தில் காயம் அடைந்த கல்லூரி மாணவர்கள் சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மனைவி ஆர்த்தியை பிரிய இதுதான் காரணம் - நடிகர் ஜெயம்ரவி விளக்கம்

மனைவி ஆர்த்தியை பிரிய இதுதான் காரணம் - நடிகர் ஜெயம்ரவி விளக்கம்

இந்த சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர்களின் பெற்றோர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 மகன்கள் கைது

அதனிப்படையில், வளசரவாக்கம் காவல்துறையினர் பாடகர் மனோவின் மகன்களான சாஹீர், ரபிக் அவர்களின் நண்பர்களான விக்னேஷ் மற்றும் தர்மா ஆகியோர் மீது கொலை மிரட்டல்,தாக்குதல், ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

arrest

இதனையடுத்து, விக்னேஷ் மற்றும் தர்மா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் தலைமறைவாக உள்ள சாஹீர், ரபிக் ஆகியோர் காவல்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.