இசையமைப்பாளர் எனது ஆடைக்குள் கை வைத்தார் - பாடகி பரபரப்பு குற்றச்சாட்டு

Sexual harassment Bollywood Hrithik Roshan
By Karthikraja Dec 14, 2024 03:30 PM GMT
Report

பிரபல இசையமைப்பாளர் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பாடகி குற்றஞ்சாட்டியுள்ளார்.

லக்னஜிதா சக்ரவர்த்தி

பெங்கால் மொழி திரைப்படங்களில் பல்வேறு பாடல்களை பாடியுள்ளனர் பாடகி லக்னஜிதா சக்ரவர்த்தி(lagnajita chakraborty). 

lagnajita chakraborty

சமீபத்தில் 'Straight Up With Shree' என்ற பாட்காஸ்ட் ஷோவில் கலந்து கொண்ட அவர், தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

வேண்டாம் என்றும் கெஞ்சினேன்; கற்பனை செய்ய முடியாத பிரச்சினை - நயன்தாரா ஓபன்டாக்

வேண்டாம் என்றும் கெஞ்சினேன்; கற்பனை செய்ய முடியாத பிரச்சினை - நயன்தாரா ஓபன்டாக்

ராஜேஷ் ரோஷன்

இதில் பேசிய அவர், நான் மும்பையில் வசித்த போது இசையமைப்பாளர் ராஜேஷ் ரோஷன்(rajesh roshan) என்னை அவரது இல்லத்திற்குஅழைத்தார். அவர் வீடு மிக ஆடம்பரமாக இருந்தது. அதில் அவரது இசை அறையில் நான் உட்கார்ந்தேன். அந்த சமயத்தில் நான், நான் சில விளம்பர பாடல்களை பாடியிருந்தேன். 

rajesh roshan

அப்போது டேபிள் மேல் இருந்த ஐபேடில் அந்த பாடல்களை காட்டும்படி என்னிடம் கூறினார். உடனே நான் ஐபேடில் அதை தேடிக் கொண்டிருந்த போது அவர் மெதுவாக என் அருகில் வந்தார். அதை நான் கவனித்தாலும் ரியாக்ட் செய்யாமல் இருந்தேன். பின்பு அவர் என் ஸ்கிர்டுக்குள் கை வைத்தார். 

உடனே நான் எதுவும் பேசாமல் எழுந்து சென்று விட்டேன். அதில் என் மேல் எந்த தவறும் இல்லை. அது அவருடைய தவறு என்பதால் அதன் பிறகு அந்த சம்பவம் குறித்து நான் பெரிதாக பேசவோ அழவோ இல்லை" என கூறியுள்ளார். ராஜேஷ் ரோஷன் பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷனின் பெரியப்பா ஆவார்.