ராதாரவி ஒரு அப்யூசிவ் ஆளு.. நான் போகணும்னு அவசியமில்ல - கொந்தளித்த சின்மயி!
தன்னை குறித்த நடிகர் ராதாரவியின் பேச்சுக்கு பாடகி சின்மயி பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகர் ராதா ரவி
தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் கலைஞர்கள் சங்கத்திற்கான தேர்தல் வரும் மார்ச் 17-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் நீண்ட காலமாக பதவி வகித்து வரும் நடிகர் ராதாரவி மீண்டும் வேட்மனு தாக்கல் செய்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ராதாரவியிடம், பாடகி சின்மயியை மீண்டும் யூனியனில் சேர்த்துக்கொள்வீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் "சின்மயியை நாங்கள் வெளியே அனுப்பவில்லை.
ஒவ்வொரு வருடமும் சந்தா கட்ட வேண்டும். கட்டவில்லை என்றால் மெம்பர்ஷிப் காலாவதியாகிவிடும். சந்தா கட்டாததால் தனது உரிமையை அவரே இழந்து விட்டார்.
சின்மயி பதிலடி
சின்மயி மீண்டும் வந்தால் சங்கத்தின் கட்டிடத்திற்கு வெளியில் வேண்டுமானால் நிற்கட்டும். ஆனால், நிச்சயமாக காம்பவுண்டில் கூட சேர்க்க மாட்டோம் என்று பேசியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்து பாடகி சின்மயி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "மலேஷியா நாடு வழங்காத போலி டத்தோ பட்டத்த தானே சூட்டிக்கிட்டு, டத்தோ வளாகம்னு பேரு வேதத அந்த டப்பிங் யூனியன் காம்பவுடு, பில்டிங் எல்லாமே இல்லீகல்னு சென்னை கார்ப்பரேஷன் சீல் வெச்சு தரமட்டம் ஆக்கிடுச்சே.
டப்பிங் யூனியன் மெம்பர்ஸோட உழைப்புல இருந்து இவங்க எடுத்த காசு மண்ணோட போச்சு. இவரை போல அப்யூசிவ ஆளு இருக்கும் எந்த காம்பவுண்ட்லயும் எனக்கு போகணும்ன்ற அவசியமில்லை" என்று பதிவிட்டுள்ளார்.