முதன்முறையாக தன் குழந்தைகளை வெளியுலகிற்கு காட்டிய சின்மயி - புகைப்படம் வைரல்!

Tamil Cinema Chinmayi Tamil Singers
By Vinothini Jun 20, 2023 04:03 AM GMT
Report

பிரபல பாடகி சின்மயி தனது முதன்முறையாக குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்டது வைரலாகி வருகிறது.

பாடகி

தமிழ் சினிமாவில் பல மெலடி பாடல்களை பாடி அனைவர் மனத்திலும் இடம் பிடித்தவர் பாடகி சின்மயி. இவர் முதலில் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக இருந்தார். பின்னர் இவர் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் மூலம் பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

singer-chinmayi-shares-her-twin-baby-pictures

இவருக்கும் நடிகர் ராகுல் ரவீந்திரனுக்கும் கடந்த 2014ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. கடந்த ஆண்டில் இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தநிலையில், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதாக விமர்சனங்கள் எழுந்தன. இவற்றையெல்லாம் எதிர்கொள்ளும் வகையில் தன்னுடைய கர்ப்பகால புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

புகைப்படம் வைரல்

இந்நிலையில், இவருக்கு குழந்தைகள் பிறந்த தகவல் வெளியானாலும், அவர்களின் புகைப்படங்களை இதுவரை வெளியிடாமல் வைத்திருந்தார். அதிலும் பல சர்ச்சைகள் எழுந்தது, தற்போது தனது இரட்டை குழந்தைகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

குழந்தைகளின் முதலாம் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்ட இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து ரசிகர்கள் நெட்டிசன்கள் என பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தங்களது கருத்துக்களையும் கூறி வருகின்றனர்.