Gay உறவுக்கு இனி தடையில்லை - வலுத்த கோரிக்கைக்கு பின் அரசு அதிரடி!

Singapore Relationship
By Sumathi Aug 22, 2022 10:03 AM GMT
Report

தன்பாலின் உறவுக்கு இருந்த தடைசட்டத்தை சிங்கப்பூர் அரசு அதிரடியாக நீக்கியுள்ளது.

சட்டப்பிரிவு 377ஏ

சிங்கப்பூரில் ஆண் தன்பாலின உறவாளர்களைத் தண்டிக்கும் சட்டப்பிரிவு 377ஏ, அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஆணும் ஆணும் உறவு கொண்டால் அவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

Gay உறவுக்கு இனி தடையில்லை - வலுத்த கோரிக்கைக்கு பின் அரசு அதிரடி! | Singapore To Repeal Law Against Gay Sex

இந்தச் சட்டம் தொடரும் என 15 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூர் அரசு உறுதியாகத் தெரிவித்திருந்தது. எனினும், இச்சட்டம் மிகவும் கண்டிப்புடன் அமல்படுத்தப்படுவது குறைந்திருந்தது.

 தன்பாலின உறவு

அதேசமயம், இந்தச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என தன்பாலின உறவாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். நவீன கலாச்சாரத்துக்கு முரணாக இந்தச் சட்டம் இருப்பதாக அவர்கள் விமர்சித்தனர்.

Gay உறவுக்கு இனி தடையில்லை - வலுத்த கோரிக்கைக்கு பின் அரசு அதிரடி! | Singapore To Repeal Law Against Gay Sex

இதுதொடர்பாக சட்டரீதியாக அவர்கள் எடுத்த முயற்சிகள் தோல்வியையே சந்தித்தன. இந்நிலையில், இந்தச் சட்டம் ரத்து செய்யப்படுவதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியேன் லோங் அறிவித்துள்ளார்.

சட்டம் நீக்கம்

அவர் தனது உரையில், “377 ஏ சட்டப்பிரிவை அரசு ரத்து செய்கிறது. ஆணுக்கும் ஆணுக்கும் இடையிலான உடலுறவைக் குற்றச்செயல் என இனி கருதப்படாது. இது சரியான நடவடிக்கை என்றே கருதுகிறேன்.

பெரும்பாலான சிங்கப்பூர் மக்கள் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்றும் நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். ஆனாலும், இச்சட்டம் நீக்கப்படுவதன் மூலம், தன்பாலின் ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்துகொள்ள முழு சட்ட அங்கீகாரம் கிடைத்துவிடவில்லை என கூறப்படுகிறது.