கோத்தபய ராஜபக்சேவின் விசாவை நீட்டித்தது சிங்கப்பூர் அரசு!

Gotabaya Rajapaksa Sri Lanka Sri Lankan political crisis Singapore
By Sumathi Jul 27, 2022 11:07 AM GMT
Report

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் விசாவை 14 நாட்களுக்கு சிங்கப்பூர் அரசு நீட்டித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை, அந்நாட்டு அரசு தவறாகக் கையாண்டதற்காக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக பல மாதங்களாக போராட்டம் நடைபெற்று வந்தது.

கோத்தபய ராஜபக்சேவின் விசாவை நீட்டித்தது சிங்கப்பூர் அரசு! | Singapore Govt Extended Visa Gotabaya Rajapaksa

அது ஒரு கட்டத்தில் பெரும் வன்முறையாகவும் வெடித்தது. முக்கியமாக போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்து போராட்டத்தை தீவிரப்படுத்தினர். அப்போது, அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது குடும்பத்துடன் இலங்கையிலிருந்து வெளியேறினார்.

 கோத்தபய ராஜபக்சே

இவ்வாறு வெளியேறிய ராஜபக்சே, மாலத்தீவிற்கு தப்பிச் சென்றார். ஆனால், அங்குள்ள மக்கள் அவருக்கு எதிராக போராட்டத்தில் குதித்தால், அவர் அங்கிருந்து வெளியேறி சிங்கப்பூருக்கு சென்றார். அங்கும் போராட்டம் எழுந்ததால், கோத்தபய டூரிஸ்ட் விசாவில் வந்துள்ளதாகவும், ராஜபக்சே தனிப்பட்ட முறையில் வந்துள்ளார்.

கோத்தபய ராஜபக்சேவின் விசாவை நீட்டித்தது சிங்கப்பூர் அரசு! | Singapore Govt Extended Visa Gotabaya Rajapaksa

அவர் அடைக்கலம் கேட்கவில்லை என்றும் சிங்கப்பூர் அரசு விளக்கம் அளித்தது. இந்த நிலையில் கோத்தபய சிங்கப்பூரில் தங்கிருப்பதற்கான 14 நாள் அனுமதி நாளையுடன் முடிவுக்கு வரும் நிலையில், தற்போது மேலும் 14 நாள் விசாவை நீட்டித்து சிங்கப்பூர் அரசு அனுமதி வழங்கி இருப்பதாக அங்கிருந்து வெளிவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

விசா நீட்டிப்பு

இது தொடர்பாக அங்குள்ள ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியில், “கோத்தபய ராஜபக்சேவுக்கு சிங்கப்பூர் அரசு புதிய விசா வழங்கி உள்ளது. அவர் சிங்கப்பூரில் தங்கி இருப்பதற்கான குறுகிய கால அனுமதிச்சீட்டு மேலும் 14 நாட்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆகஸ்டு 11-ந்தேதி வரை அவர் சிங்கப்பூரில் தங்கி இருக்க முடியும் என்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய இலங்கை போக்குவரத்து மந்திரியும், மந்திரிசபை செய்தித் தொடர்பாளருமான பந்துல குணவர்த்தனா,

கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பிச்சென்றதாகவோ அல்லது மறைந்து வாழ்வதாகவோ நாங்கள் கருதவில்லை. அவர் சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு திரும்பி வருவார் என்று தெரிவித்துள்ளார்.