'மகாராஜா' பார்த்துட்டு என் மனைவி ரியாக்ஷன்? அப்படி நெனச்சு.. புலம்பிய சிங்கம்புலி!

Vijay Sethupathi Tamil Cinema Tamil Actors Tamil Actress Maharaja
By Jiyath Jun 15, 2024 01:57 PM GMT
Report

மகாராஜா திரைப்படம் குறித்து நடிகர் சிங்கம்புலி பேசியுள்ளார். 

மகாராஜா 

நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படம் நேற்று வெளியானது. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். மேலும் விஜய் சேதுபதிக்கு இது 50-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் காமெடி கேரக்டர்களில் கலக்கி வந்த சிங்கம் புலி, ஒரு படு மோசமான நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளாராம். 

சூரிக்கு உதவி செய்யப்போய் எனக்கு இப்படி நடந்துருச்சு; இனி அவ்வளவுதான் - சசிகுமார் பளீச்!

சூரிக்கு உதவி செய்யப்போய் எனக்கு இப்படி நடந்துருச்சு; இனி அவ்வளவுதான் - சசிகுமார் பளீச்!

சிங்கம் புலி

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், தனது மனைவி பார்த்தால் என்ன நினைப்பாரோ தெரியவில்லை எப்படி ஏற்றுக் கொள்வார் என்றும் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

அதேபோல், தனது மகன்கள் படத்தை பார்த்து விட்டு ஒன்றும் சொல்லவில்லை என்றும் கல்லூரி படிக்கும் குழந்தைகளுக்கு நம்முடைய கதாபாத்திரம் எல்லாம் புரியாது என பேசியுள்ளார்.

மேலும், வேறு மாதிரி நினைத்துக் கொண்டு ரசிகர்கள் படத்தை பார்த்துக் கொண்டிருக்க என்னுடைய கதாபாத்திரம் திடீரென மாறியதும் அனைவரும் ஷாக் ஆகிவிடுவார்கள்" என்று புலம்பியுள்ளார்.