அதனாலயே என்னோட புருஷன் கூடவே இருப்பாரு....ஷூட்டிங்'ல அதெல்லாம் சாதாரணம் - நீலு நஸ்ரின் பகீர்

Tamil Cinema Actress
By Karthick Apr 03, 2024 04:10 PM GMT
Report

சிங்கம் புலி படத்தில் சில காட்சிகளிலேயே தோன்றி பெரும் கவனத்தை பெற்றவர் நீலு நஸ்ரின்.

நீலு நஸ்ரின்

படங்கள் பலருக்கும் பெரும் பிரபலத்தை எளிதில் வாங்கி கொடுத்துவிடும். அது 100 படங்களோ, ஒரே படமோ அல்லது ஒரு சில காட்சிகளோ, சினிமா ஈர்ப்பு மக்களிடம் இன்னும் அதிகரித்து கொண்டே இருக்கும் சூழலில், பிரபலங்களும் வந்து கொண்டே இருக்கிறார்கள்.

singam-puli-actress-about-adjustment-in-cinema

இன்றைய ஆண்ட்ராய்டு காலத்தில் பிரபலமடைவது எளிதான விஷயமாகிவிட்ட நிலையில், அப்படி ஒரு சில காட்சிகளில் மட்டுமே தோன்றி பெரும் பிரபலமைந்ததவர்களின் பட்டியலில் முக்கிய இடத்தை பிடிக்கிறார் நீலு நஸ்ரின்.

ஓரினசேர்கையும் காதல் தான...அதுக்கு நா வெட்கப்பட்டது இல்ல - அம்மு அபிராமி

ஓரினசேர்கையும் காதல் தான...அதுக்கு நா வெட்கப்பட்டது இல்ல - அம்மு அபிராமி

ஜீவா நடிப்பில் வெளியான "சிங்கம் புலி" படத்தில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்களுக்கு கவனத்தை பெருமளவில் ஈர்த்தார் நீலு நஸ்ரின். அதன் பிறகு அவருக்கு பெயர் கொடுக்கும் அளவிற்கு பெரிதாக படங்கள் அமையவில்லை.

சாதாரணமாக..

அவர் அண்மையில் அளித்த பேட்டியில், சினிமாவில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் சீண்டல் குறித்து பேசியுள்ளார். அவர் அளித்த பேட்டியில், ஷூட்டிங் ஸ்பாட்டில் படப்பிடிப்புகள் மட்டுமின்றி, சினிமா படப்பிடிப்புகளில் சாதரணமாக பெண்களுக்கு நிறைய தொந்தரவுகள் நடப்பதாக குறிப்பிட்டார்.

singam-puli-actress-about-adjustment-in-cinema

மேலும், இது போன்ற சில விஷயங்களை தான் கண்கூடாகவே பார்த்ததாக தெரிவித்த நீலு நஸ்ரின், இதன் காரணமாகவே தான் படப்பிடிப்பிற்கு செல்லும் போது கணவரையும் அழைத்துச் செல்வதாக குறிப்பிட்டு, அவர் இருக்கும் காரணத்தால் தனக்கு அது போன்ற தொல்லைகள் ஏற்பட்டது கிடையாது என்றும் கூறியுள்ளார்.