ஓரினசேர்கையும் காதல் தான...அதுக்கு நா வெட்கப்பட்டது இல்ல - அம்மு அபிராமி
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் முக்கிய இடத்தில் உள்ளார் அம்மு அபிராமி.
அம்மு அபிராமி
துணை நடிகையாக ராம்குமார் இயக்கத்தில் வெளியான "ராட்சசன்" படத்தில் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் நடிகை அம்மு அபிராமி. அப்படம் பெரும் வெற்றியை பெற்றது.
அதனை தொடர்ந்து தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான "அசுரன்" படத்தில் நாயகியாக நடித்து நடிப்பிற்கும் சிறப்பான பாராட்டுகளை பெற்றார். அசுரன் படத்தின் வெற்றி தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை அம்மு அபிராமிக்கு கொடுத்தது.
அதனை தொடர்ந்து அவர், பாபா பிளாக் ஷீப், கண்ணகி போன்ற படங்களில் தொடர்ந்து தற்போது ஹாட்ஸ்பாட் என்ற படத்தையும் முடித்துள்ளார்.
வெட்கப்பட்டதும் இல்லை
கடந்த 29-ஆம் தேதி இப்படம் வெளியாகியுள்ளது. Controversial'ஆன கதையம்சம் கொண்ட இப்படத்தில் அம்மு அபிராமி, தன்பாலின ஈர்ப்பாளர் குறித்த வசனம் ஒன்றை பேசியுள்ளார்.
இது குறித்து படக்குழு செய்தியாளர்கள் சந்திப்பின் அவரிடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த அம்மு அபிராமி, இப்போது உலகத்தில் முற்போக்கை நோக்கி அனைவரும் சென்று கொண்டு இருக்கிறார்கள் என்று கூறி, காதல் என்றால் அது காதல் தான், அதற்கு வேறு அது அர்த்தமும் கிடையாது என்றார்.
மேலும், காதல் உண்மையானதாக இருந்தால் மட்டுமே போதும் என்று கூறி காதல் குறிப்பிட்ட பாலினத்தவரை பார்த்து தான் வர வேண்டும் என்றெல்லாம் கிடையாது என்றும் அந்த வசனத்தை பேசியதற்காக நான் வெட்கப்பட்டதும் கிடையாது என கூறி, அது ஒன்றும் தவறு கிடையாது என தெரிவித்துள்ளார்.