ஐ அம் வெயிட்டிங்...அண்ணாமலையை சீண்டும் அதிமுக சிங்கை ராமச்சந்திரன்..!
கோவை தொகுதியில் பாஜக வேட்பளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை களமிறக்கப்படுகிறார்.
பாஜக வேட்பாளர்
பட்டியல் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தென் சென்னையில் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய சென்னையில் வினோஜ்.பி.செல்வம், கோவையில் அண்ணாமலை, நீலகிரியில் எல்.முருகன், நெல்லையில் நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் போன்றோர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
இதில், பெரும் கவனம் பெற்றுள்ளது அண்ணாமலை தான். தமிழக பாஜகவின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய அவரை பாஜகவிற்கு செல்வாக்கான கோவை மாவட்டத்தில் களமிறங்கியுள்ளது பாஜக.
இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளராக சிங்கை ராமசந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். 2016-ஆம் ஆண்டு முதல் அதிமுகவின் ஐடி விங் மாநில செயலாளராக இருந்து வரும் இவரின் தந்தை முன்னாள் மாவட்ட செயலாளரும், அதிமுக சார்பில் எம்.எல்.ஏ'வாக இருந்த சிங்கை கோவிந்தராசு.
ஐ அம் வெயிட்டிங்
கோவை சுற்றுவட்டார பகுதிகளில் இன்னும் செல்வாக்குடன் இருக்கும் சிங்கை கோவிந்தராசுவின் மகன் போட்டியிடுகிறார் என்பதால், கோவை தொகுதியில் கடுமையான போட்டி நிலவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தான் அண்ணாமலை வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து, அது தொடர்பாக பதிவு ஒன்றை சிங்கை ராமசந்திரன் வெளியிட்டுள்ளார். அப்பதிவில் அவர்,அண்ணாமலை கோவையில் போட்டியிடுவதைக் குறிப்பிட்டு, ஐ அம் வெயிட்டிங் (I am Waiting) என பதிவிட்டுள்ளார்.
I am waiting @annamalai_k ? pic.twitter.com/kYmwrtWY1U
— Singai G Ramachandran - Say No to Drugs and DMK (@RamaAIADMK) March 21, 2024