விஜய் உடன் இணைத்து பரவிய வதந்தி - ஆவேசமாக பதிலளித்த சிம்ரன்
விஜய் உடன் சேர்த்து பரவிய வதந்திக்கு நடிகை சிம்ரன் விளக்கமளித்துள்ளார்.
சிம்ரன்
ஒன்ஸ்மோர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சிம்ரன். விஜய்,அஜித், சூர்யா, கமல் என முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார்.
வாலி, ஜோடி, கன்னத்தில் முத்தமிட்டால், வாரணம் ஆயிரம் என பல படங்களில் நடித்த இவர், 2003 ஆம் ஆண்டு தனது சிறு வயது நண்பரான தீபக் பாகாவைத் திருமணம் செய்த பின் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார்.
விஜய் உடன் வதந்தி
இந்நிலையில் விஜய் வைத்து சிம்ரன் பட தயாரிக்க ஆசை பட்டதாகவும், அதற்கு "படம் தயாரிப்பது எல்லாம் ரொம்ப கஷ்டம், என் படத்தை ரிலீஸ் செய்ய நிறைய நிறைய சிக்கல் வரும்" என அறிவுரை கூறி, படத்தில் நடிக்க விஜய் மறுப்பு தெரிவித்ததாகவும் இணையத்தில் தகவல் வெளியானது.
இந்நிலையில் இதற்கு விளக்கமளித்து சிம்ரன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில், "என் திரையுலக வாழ்வில் இதுவரை நான் எந்த வதந்திகளுக்கும் பதிலளித்தது கிடையாது. இப்படியான விஷயங்களைக் கடந்து சென்றுவிடுவேன். ஆனால் இப்போது என்னைப் பற்றிப் பரவி வரும் வதந்திகளுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
சிம்ரன் விளக்கம்
எந்த பெரிய ஹீரோக்களுடனும் இணைந்து பணியாற்ற நான் ஆசைப்பட்டதே இல்லை. வாய்ப்புகள் வந்தபோது நடிப்பேன். இப்போது எனது வாழ்வு முறை, இலக்குகள் எல்லாம் மாறிவிட்டன. என் பெயரை இன்னொருவருடன் இணைத்து சமூக வலைதளங்களில் பேசப்படுவதை பல ஆண்டுகள் சகித்துக்கொண்டிருந்தேன்.
It's truly disheartening to see how people can emotionally manipulate you and how little your friends seem to care about it. Up until now, I’ve stayed quiet, but let me make it clear: I’m not desperate to line up and work with any big heroes. I've been there and done that. My…
— Simran (@SimranbaggaOffc) September 21, 2024
ஆனால், சுயமரியாதை என்பது எல்லாவற்றையும் விட ரொம்ப முக்கியம். 'Stop' என்பது பவர்ஃபுல்லான வார்த்தை. அதை இப்போது பயன்படுத்துவது சரியாக இருக்கும். இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க யாரும் என்னை தொடர்பு கொண்டு பேசவில்லை. என் உணர்வுகளை புரிந்து கொள்ள யாரும் இல்லை. வதந்தி பரப்புபவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.