காங்கிரஸில் பாலியல் தொல்லை? குற்றச்சாட்டு கூறிய பெண் கட்சியிலிருந்து நீக்கம்
காங்கிரஸ் கட்சியிலும் பாலியல் தொல்லை இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கேரள காங்கிரஸ்
திரைத்துறையில் உள்ளது போல் காங்கிரஸ் கட்சியிலும் பாலியல் தொல்லை உள்ளதாக கேரள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த உறுப்பினர் சிமி ரோஸ்பெல் ஜான் குற்றஞ்சாட்டினர்.
இந்த குற்றச்சாட்டு கூறியதையடுத்த சில மணி நேரங்களில் கேரள காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக கேரள காங்கிரஸ் கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
நீக்கம்
ஊடகங்கள் முன்பு பெண் தலைவர்களை அவமதித்ததற்காக கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து சிமி நீக்கப்பட்டதாக கேபிசிசி செய்திக்குறிப்பில் விளக்கமளித்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கு பதிலளித்த அவர், நீண்ட காலமாக கட்சிக்காக உழைத்த என்னை நீக்கியுள்ளார்கள். மானம் உள்ள பெண்களால் காங்கிரஸ் கட்சியில் பணியாற்ற முடியாது என்றும், தான் சிபிஎம் கட்சியுடன் சதி செய்ததாகக் கூறப்படும் ஆதாரங்களை வெளியிடுமாறு அவர் கட்சிக்கு சவால் விடுத்தார். மேலும் எதிர்க்கட்சி தலைவர் விடி சதீசன் மீதும் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
தலைமைக்கு நெருக்கமான பெண்கள் மட்டும் பதவிக்கு வர வாய்ப்புள்ளதாக கூறிய அவர், பல பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட எதிர்மறையான நிகழ்வுகளை தன்னிடம் கூறியதாகவும் தேவையான நேரத்தில் ஆதாரம் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.