வெளிநாட்டில் காதலியுடன் சிம்பு.!!வைரலாகும் புகைப்படம்!!
சிம்பு
பல காதல் கிசுகிசுக்களில் தொடர்ந்து சிக்கி வரும் தமிழ் நடிகர் என்றால் அது சிம்பு தான். படங்களில் ஒரு இடைவேளைக்கு பிறகு திரும்பிய அவர் தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48-வது தயாராகி வருகின்றார்.
மிக பிரமாண்டமாக தயாராகவுள்ள இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் தான் சிம்பு, வெளிநாடுகளில் தாங்கி படத்திற்காக பயிற்சி எடுத்து வருகின்றார் என்று கூறப்படுகிறது.
காதலியா..?
இந்நிலையில் தான் தற்போது, சிம்புவின் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் பெரும் வைரலாகி வருகின்றது. பல காதல் கிசுகிசுக்களில் சிக்கியுள்ள சிம்புவிற்கு எப்போது தான் திருமணம் நடைபெறும் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
அது குறித்த புகைப்படம் ஒன்று தான் அந்த வைரல் படம். வெளிநாட்டில் ஹோட்டல் ஒன்றில் சிம்புவுடன் பெண் ஒருவர் அமர்ந்திருக்கிறார்.
அந்த படத்தில் இருக்கும் பெண் யார் என்று தெரியவில்லை என்றாலும், அவர் சிம்புவின் காதலியா? என்பதும் உறுதியாகாத நிலையில், இது குறித்து ரசிகர்கள் பல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.